கடல் அலையில் சிக்கிய தாயும் மரணம் – சோகத்தில் உறவினர்கள்

கடந்த வாரம் தென்னிலங்கையில் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

ஹட்டனை சேர்ந்த ஹசினி விஜேசூரிய என பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் நுவரெலியாவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் தனது குடும்பத்தினர் மற்றும் அலுவலக பணியாளர்களுடன் யால பிரதேசத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தார்.

பின்னர் கடலில் விளையாட சென்ற நிலையில் குறித்த பெண் தனது கணவன் மற்றும் மகள் இருவருடன் நீரில் மூழ்கியுள்ளார்

அன்றை தினமே கணவர் மற்றும் மகள்கள் சம்பவத்தில் உயிரிழந்த நிலையில் ஹசினி மாத்திரம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

குறித்த மூவரதும் இறுதி சடங்கு கடந்த 25ஆம் திகதி ஹட்டன் குடாகம பொது மயானத்தில் இடம்பெற்றது.

7 நாள் நினைவு தினம் நிறைவடைந்த நிலையில் மனைவியும் நேற்று உயிரிழந்துள்ளார் என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த குடும்பமும் கடல் அலைக்கு இரையாகி உயிரிழந்துள்ளமை அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.