அந்தரத்தில் பறந்த இந்திய வீரர் அவசர சிகிச்சைக்கு…..!

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி அதிரடியான தொடக்கத்துடன் அட்டகாசமாக விளையாடி வருகின்றது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், ஜானி பெயர்ஸ்டோ இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறி அடித்து சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசித் தள்ளினார்கள். இந்த இந்த இணையை பிரிக்கமுடியாத இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினார்கள்.

22 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேசன் ராய் தூக்கி அடித்த ஒரு பந்தினை அசாத்தியமான ஒரு கேட்சில் இந்தியாவிற்கு முதல் விக்கெட்டை பெற்றுக் கொடுத்தார் மாற்று ஆட்டகாரராக வந்த ரவீந்திர ஜடேஜா.

மாற்று ஆட்டக்காரராக ரவீந்திர ஜடேஜா யாருக்காக வந்து உள்ளார்? என்ற தகவல் முதலில் தெரியாத நிலையில், பின்னர் அது குறித்த தகவலானது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கிடைத்துள்ளது. 16-வது ஓவரில் பெயர்ஸ்டோ அடித்த பந்தை சிக்சருக்கு செல்லும் நிலையில் அதனை கேட்ச் செய்ய முற்பட்டு, அந்தரத்தில் டைவ் அடித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், அவருக்கு தீவிர காயம காயம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. அவருக்கு பதிலாகவே ரவீந்திர ஜடேஜா மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி உள்ளார்.

உடனடியாக சிகிச்சைக்கு சென்ற லோகேஷ் ராகுலை பரிசோதித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வெளிப்புறமாகவே காயம் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் பேட்டிங் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க முடியாத பட்சத்தில், அந்த இடத்தில் இன்றைய போட்டியில் உலகக் கோப்பையில் அறிமுகமான ரிஷப் பாண்ட் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. லோகேஷ் ராகுல் 4வது இடத்தில் விளையாடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.