தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டம் அருகில் உள்ள சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ்.
மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகள் கோயம்புத்தூரில் தங்கியிருந்து படித்து வருகிறார். 2-வது மகள் அனுதாஸ் (19) மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலையில் கிறிஸ்துதாஸ் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். மனைவி கீதா அருகில் உள்ள ஓட்டலில் சமையல் வேலைக்கு சென்றார். அனுதாஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
மதியம் கீதா வீட்டுக்கு வந்த போது அனுதாஸ் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி துடித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.