தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரினச்சேர்க்கை மோகத்தால் இளம்பெண், தனது கல்லூரி தோழியுடன் மாயமாகி உள்ள சம்பவம் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் அருகே இளம்பெண் ஒருவருக்கு, சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த சில வாரங்களில் தனது கணவருடன் விருந்து நிகழ்ச்சிக்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்
இந்த நிலையில் அவர் கல்லூரி சான்றிதழ் வாங்கி வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இச்சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் உறவினர்கள் புகார் அளித்தனர்.
பொலிசார் இளம் பெண் மாயம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். முதற்கட்டமாக இளம்பெண்ணின் சக தோழிகளிடம் விசாரித்தனர்.
அப்போது ஏற்கனவே தன்னுடன் கல்லூரியில் பயின்ற தோழி ஒருவருடன், இளம்பெண்ணுக்கு நெருக்கமான உறவு இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக அந்த தோழி குறித்து பொலிசார் விசாரித்தனர். அவர் சென்னையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
திருமணத்துக்கு முன்பே இளம்பெண்ணுக்கும், தோழிக்கும் ஓரினச்சேர்க்கை உறவு இருந்துள்ளது. மட்டுமின்றி இளம் பெண்ணுக்கு திருமணம் முடிந்த பின்னரும்,
அவர் கணவரின் ஆசைக்கு இணங்கவில்லை எனவும். முதல் இரவில் கூட விருப்பம் இல்லாதவராக இருந்துள்ளதும் தற்போது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தற்போது மாயமான இளம்பெண்ணும், தோழியும் சென்னையில் தங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.