மூன்று மாதங்களுக்கு பின் கோமாவில் இருந்து எழுந்த கணவனிடம், தான் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறி பிரித்தானிய தாய் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு தந்தையான ஜோசப் கல்லன், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்று இரவு திடீரென அவருக்கு கைகள் மற்றும் கால்கள் செயலிழந்தன. மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் இரத்த பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் மருத்துவர்களும் குழம்பியிருந்த வேளையில், ஜோசப் கோமா நிலைக்கு சென்றுள்ளார். அவருடைய முதுகெலும்பு திரவ மாதிரிகள் ஸ்வீடன் மற்றும் அமெரிக்காவில் உள்ள நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவருக்கு ஆட்டோ இம்யூன் என்செபாலிடிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலை ஆரோக்கியமான மூளை செல்களை தாக்குவது தெரியவந்தது.
மருத்துவர்களும் ஜோசப் உயிர் பிழைப்பது கடினம் என அவருடைய மனைவி பில்லி ஸ்மித்திடம் கூறியுள்ளனர்.
இதனால் பில்லி ஸ்மித் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார். மூன்று மாதங்களுக்கு பின் ஜோசப்பிற்கு நினைவு திரும்பியுள்ளது.
அந்த தருணம் குறித்து ஜோசப் கூறுகையில், நான் விழித்ததும் என்னுடைய மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினார். எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சந்தோசத்தில் நான் அழ ஆரம்பித்துவிட்டேன்.
என் நிலையை நினைத்து நான் ஏற்கனவே அவநம்பிக்கையில் இருந்தேன். அந்த சமயத்தில் இது நல்ல செய்தியாக இருந்தது எனத்தெரிவித்துள்ளார்.
என் மனைவிக்கு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்தது. என்னால் நடக்க முடியாத காரணத்தால் இன்னும் மருத்துவமனையில் தான் இருந்து வருகிறேன். விரைவில் வீட்டிற்கு சென்று என் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும்.
அதற்காக தற்போது எனக்கு தினமும் நடைப்பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.