விடுதியில் தங்கிய தம்பதி.. கதவை உடைத்த ஊழியர் அங்கு கண்ட காட்சி…

இந்தியாவில் ஹொட்டல் அறையில் தங்கியிருந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்களின் மகனும் உயிரிழந்துள்ளார்.

புனேவை சேர்ந்தவர் வினோத் ஜோஷி (59). இவர் மனைவி மீனா ஜோஷி (50) தம்பதியின் மகன் ஷேரேயாஸ் (18).

இந்நிலையில் கடந்த 24ஆம் திகதி கோல்ஹபூர் நகரில் உள்ள தனியார் விடுதிக்கு மூவரும் சென்றனர்.

அங்கு விடுதி ஊழியர்களிடம் தாங்கள் 28ஆம் திகதி வரை அங்கு தங்குவோம் என்றும் தங்கள் அறைக்கு வந்து யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறினார்கள்.

மேலும் தங்களுக்கு எதாவது வேண்டும் என்றால் நாங்களே நிர்வாகத்தை தொடர்பு கொள்வோம் என வினோத் கூறினார்.

இந்நிலையில் இரண்டு நாட்கள் மட்டும் வெளியில் வந்த வினோத் மற்றும் ஷேரேயாஸ் பின்னர் அறையில் இருந்து வெளியில் வரவில்லை.

இதையடுத்து 28ஆம் திகதி இரவு 8 மணிக்கு ஹொட்டல் ஊழியர், வினோத் மற்றும் குடும்பத்தார் தங்கிய அறையை தட்டியும் அவர்கள் திறக்கவில்லை.

இதோடு அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது வினோத்தும், மீனாவும் விஷம் குடித்து சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதோடு ஷேரேயாஸ் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் இருவர் உடலையும் மீட்ட பொலிசார் இளைஞரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஷேரேயாஸ் நேற்று உயிரிழந்தார்.

இதனிடையில் ஹொட்டல் அறையில் எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

அதில், எனது தொழிலில் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டதால் அதிகளவு பணத்தை இழந்துவிட்டேன், வாங்கிய கடனையும் கட்டமுடியவில்லை என எழுதப்பட்டிருந்தது.

மேலும் ஏழு பேரின் பெயர்கள் மற்றும் செல்போன் நம்பர் எழுதப்பட்டிருந்தது.

அவர்களுக்கு தங்கள் இறப்பு பற்றி தகவல் தெரிவிக்குமாறும், தங்கள் மரணத்துக்கு யாரும் பொறுப்பில்லை என்றும் எழுதப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் தற்கொலைக்கு சில நாட்களுக்கு முன்னரில் இருந்து வினோத் மற்றும் குடும்பத்தார் மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.