இந்திய கோடீஸ்வரர் அம்பானியின் தற்போதைய பரிதாப நிலை…

இந்தியாவின் கோடீஸ்வரராக இருந்த அனில் அம்பானி தற்போது கடனில் சிக்கி தவித்து வருவதால், தனது நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை அவர் விற்க முடிவு செய்துள்ளார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் பெயரில் ஆயிரம் கோடிக்கணக்காக கடன் சுமை உள்ளதால், அந்தக் குழுமத்தின் பங்குகள் மோசமான சரிவைச் சந்திந்துவருகின்றன.

இதனால் அவர் கடனை எப்படி அடைப்பது என்பதில் தீவிரவமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம் மும்பையின் சாண்டாக்ரூஸ் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த அலுவலகமானது 7 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது. தற்போது கடனால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் அனில் அம்பானி இந்த அலுவலகத்தை விற்க முடிவு செய்துள்ளார்.

அப்படி விற்க முடியவில்லை என்றால் குத்தகைக்கு விடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த அலுவலகம் விற்கப்பட்டால், 1500 முதல் 2000 கோடி ரூபாய் வரை விற்பனையாகக் கூடும் என்று கூறப்படுகிறது.

ஆனால் ரிலையன்ஸ் குழுமமானது, 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஈட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பையில் இருக்கும் அலுவலகத்தை விற்க முடிவு செய்துள்ளதால், தலைமை அலுவலகத்தை தெற்கு மும்பையில் உள்ள பல்லார்ட் எஸ்டேட்டுக்கு மாற்றி விட அனில் அம்பானி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.