இரண்டு பெண்களுடன் ஒரே அறையில் தங்கிய நபர்..

தமிழகத்தில் விடுதியில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் அருளானந்தம். இவர் கடந்த 25ஆம் திகதி 2 பெண்களுடன் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் 2 நாட்கள் ஆகியும் அறை காலி செய்யப்படாததால் சந்தேகமடைந்த விடுதியின் மேலாளர் அறையை திறந்து பார்த்தபோது பெண் ஒருவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரித்த நிலையில் இறந்தவர் கவிதா என்பதும், அருளானந்தத்துடன் வந்த மற்றொரு பெண் அவரது மனைவி சுமதி என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, சுமதியை பொலிசார் கைது செய்த நிலையில் விசாரணையில் பகீர் தகவல் வெளியானது.

அருளானந்தத்துக்கும் கவிதாவுக்கும் இடையில் கூடாநட்பு இருந்த நிலையில், அவரை அடிக்கடி தொடர்பு கொண்ட கவிதா பணம் கேட்டு தொல்லை கொடுத்தார்.

இதனால் கடுப்பான அருளாநந்தம் இது குறித்து மனைவியிடம் கூற, இருவரும் சேர்ந்து கவிதாவை வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்து அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், கவிதாவை அடித்து கொலை செய்து விட்டு இருவரும் தப்பி ஓடியது தெரியவந்தது.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள அருளாநந்தத்தை பொலிசார் தேடி வருகிறார்கள்.