பரு வடுக்களை மறைக்க வேண்டுமா?

முகம் என்றாலே பருக்கள் இருப்பது வழக்கம் தான்.

ஒரு தடவை பருக்கள் வந்து விட்டால் அதன் தடத்தையும் முகத்தில் விட்டு விட்டு போய் விடுகிறது.

பரு வந்தால் அதனை நகங்களை வைத்து கிள்ளவே, அழுத்தி துடைக்கவே கூடாது. இப்படி செய்வதனால் பரு வடுக்களாக மாறி விடுகின்றது.

இது முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றது.

அதற்கு வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை கொண்டே எளிய முறையில் அகற்ற முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்
  • 1/2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்
பயன்படுத்தும் முறை

கற்றாழை இலையிலிருந்து கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக ஒரு பெளலில் எடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு லெமன் ஜூஸை அதனுடன் சேர்த்து கலக்கவும்.

இப்பொழுது இந்த மாஸ்க்கை முகத்தில் போடுங்கள்.

இதை அப்படியே 20 – 30 நிமிடங்கள் காய விடவும். 30 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 3-4 தடவை என தினமும் செய்யவும்.