2 வயது சிறுமியை உயிரோடு அப்படியே சாப்பிட்ட முதலைகள்…

கம்போடியாவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை முதலைகள் உயிரோடு சாப்பிட்ட சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்போடியாவைச் சேர்ந்தவர் Nay. 32 வயதான இவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தான் இவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது. இதனால் அந்த குழந்தையை கவனித்துக் கொண்டிருந்த இவர், தன்னுடைய இரண்டு வயது மகள் Rom Roath Neary-ஐ கவனிக்காமல் இருந்துள்ளார்.

இதனால் சம்பவ தினத்தன்று காலை 10 மணிக்கு வந்த அவரது தந்தை Min Min(35) மகளை தேடியுள்ளார். ஆனால் மகள் எங்கு தேடியும் கிடைக்காத போது, அருகிலிருந்து முதலை பண்ணையில் மகளின் மண்டை ஓட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின் அங்கிருந்த முதலைகள் மகளை சாப்பிட்டுருக்கின்றன என்பதை கண்டுபிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து மனைவியிடம் தெரிவிக்க, அவர் முதலை பண்ணை அருகே வந்து அந்த காட்சியை பார்த்து கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு அந்த சிறுமி முதலை பண்ணைக்கு அருகில் தான் விளையாடியுள்ளார். இதைக் அங்கிருந்த இளைஞன் ஒருவர் பார்த்துள்ளார். அந்த முதலை பண்ணையில் அந்தளவிற்கு தடுப்புச் சுவர் இல்லை, எனவும் குழந்தைகள் இடையில் செல்வதற்கு இடம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தாயின் அஜாக்கிரதையின் காரணமாவே இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், அவர் தனக்கு பிறந்த மூன்றாவது குழந்தையை கவனிப்பதிலே கவனமாக இருந்ததால், இந்த விபரீதம் நடந்துள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.