குழந்தையுடன் காரில் இருந்த பெண்… கணவனை மிரட்டி மூன்றுபேர் செய்த செயல்.!

டெல்லியில் வீட்டு வாசலில் காரை நிறுத்திய தம்பதியினரை சுற்றி வளைத்த முகமூடி அணிந்த 3 பேர், துப்பாக்கி காட்டி மிரட்டி செய்த செயலின் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி குஜ்ரன்வாலா பகுதியை சேர்ந்த தம்பதியினர், வெளியே சென்று விட்டு அதிகாலையில் வீடு திரும்பியுள்ளனர். காரை வீட்டு வாசலில் நிறுத்திய கணவர், வெளிக் கதவுகளை மூடுவதற்காக சென்றுள்ளார். மனைவி காரின் உள் உறங்கி கொண்டிருந்த தனது குழந்தையை அணைத்தவாறு அமர்ந்திருந்தார்.

அப்போது திடீரென முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன், அவரை சுற்றி வளைத்து வழிப்பறியில் ஈடுபட்டனர்.

மேலும் காரின் கதவுகளை திறந்து உள்ளே குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண்ணிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இந்த வழிப்பறி காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ள நிலையில் அது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.