இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதிற்கு டோனியே முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில், அதன் உண்மை நிலவரம் என்பதை பார்ப்போம்.
உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின, இப்போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதில் கடை கட்டத்தில் டோனி அடித்து விளையாடததே காரணம் என்று கூறப்படுகிறது. கடைசி 5 ஓவரில் 12 ரன் ரேட் என்று இருக்கும் போது, டோனி மற்றும் கீதர் ஜாதவ் அடித்து ஆடாமல் ஓடியே ஓட்டம் எடுத்தனர் என்று ரசிகர்கள் குற்றம் கூறுகின்றனர்.
ஆனால் நேற்றையை போட்டியை பொறுத்தவரை டோனி தான் தோல்விக்கு முக்கிய காரணமா என்று பார்த்தால், அப்படி கூற முடியாது? இதற்கு முதலில் ஆடிய பேட்ஸ்மேன்களுமே காரணம் என்று கூறலாம்.
துவக்கத்தில் ராகுல் 9 பந்துகளை சந்தித்து ஓட்டம் எதுவுமே எடுக்காமல் அவுட்டானர். அப்போது முதலே, இந்தியா ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
பவர் பிளே இருந்தும், முதல் 10 ஓவர்களில், 30 ஓட்டங்களைக் கூட இந்தியா கடக்கவில்லை. ஹிட் மேன் ரோகித் ஷர்மாவும், விராட் கோஹ்லியும் மெல்ல மெல்லதான் ஷாட்டுகளை அடிக்க ஆரம்பித்தனே தவிர, எல்லா ஓவர்களையும் அடித்து ஆடவில்லை.
இருவருமே சற்று வேகம் எடுக்க ஆரம்பித்தபோது, ஒருவர் பின் ஒருவராக நடையை கட்டிவிட்டனர்.
பாண்ட்யா வந்த வேகத்தில், துணி சில அருமையான பவுண்டரிகளை விளாசினார். ஆனால் அவரும் பிறகு கட்டை போட்டார்.
இந்திய இன்னிங்சில் ஒரே ஒரு சிக்சர்தான் வந்தது. அது டோனி 50-வது ஓவரில் விளாசிய சிக்சர் மட்டுமே.
இருந்தாலும், கடைசி நேரத்தில்தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். அப்போதுதான் டோனி பவுண்டரிகள் அடிக்காமல், ஓட்டங்கள் எடுத்தார் என்பதுதான் அவர் மீது ரசிகர்கள் அதிகம் கோபப்பட காரணமாக அமைந்துவிட்டது, ஆனால் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட முற்பட்ட போது பெளலியன் திரும்பி கொண்டே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.