தங்கைக்கு அண்ணன்களால் நேர்ந்த கொடூரம்…

இந்தியாவில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை தங்கை காதலித்த நிலையில், அவரை தங்கள் சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொள்ளும் படி கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பட்டியலின இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த இளைஞருடன் இப்பெண் சென்றுவிட்டதால், பெண்ணை காணவில்லை என்று சகோதரர்கள் காவல்நிலையத்தில் தெரிவிக்க, பொலிசார் அப்பெண்ணை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்.

அதன் பின் சில நாட்கள் கழித்து அந்த சகோதரர்கள் தங்களது சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்க, கடந்த ஜூன் 25-ஆம் திகதி அன்று, அந்த பெண்ணை தர தரவென இழுத்து சென்று, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ய வற்புறுத்தி, பெண்ணின் சகோதரர்கள் உட்பட அந்த பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் அடித்து துன்புறுத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் அந்த பெண் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை. நீளமான குச்சிகளை வைத்து அந்த பெண்ணின் முதுகு, கால் ஆகிய இடங்களில் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ காட்சிகள், வெளியாகி காண்போரை அதிர செய்துள்ளது.

வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அந்த வீடியோவில் இருக்கும் வாகன் எண்ணை வைத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.