இன்று இரவு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட தபால் புகையிரதத்துடன் கிளிநொச்சி – பரந்தன் பகுதிக்கு இடையே இடம்பெற்ற விபத்தில் மோதி சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.
இதனிடையே விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து பலியான சிறுவனின் சடலத்தையும் ஏற்றிக்கொண்டு குறித்த தொடருந்து கிளிநொச்சி புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.
இதனையடுத்து தகவல் வழங்கப்பட்டதையடுத்து பெற்றோர் சடலத்தை அடையாளங்காட்டியிருந்தனர்.
இன்று காலையும் வவுனியாவில் பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.