ஹோட்டலில் மர்மமாக இறந்து கிடந்த பிரபல நடிகை!

சினிமா பிரபலங்களில் வாழ்க்கையில் சக மனிதர்களை போல சோக பக்கங்களும் உண்டு. சில நடிகர், நடிகைகளின் துர்மரணம் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துவிடுகிறது.

அந்த வகையில் தென் கொரியன் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை Jeon Mi-seon. 48 வயதான இவர் அண்மையில் ஹோட்டலில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் பாத்ரூமில் தூக்கு மாற்றி இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி அளித்தது. அவரின் மேனேஜர் கடந்த இரண்டு நாட்களாக அவரை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமான அவர் போலிசில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில் அந்த நடிகை அதிக மன உளைச்சலால் தான் இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்காக மருந்து உட்கொண்டு வந்துள்ளாராம்.

கடைசியாக கூட அவர் நடித்துள்ள The Kings Letter படத்திற்காக கடந்த புதன்கிழமை தலைநகர் சியோலில் புரமோசன் செய்துள்ளார். அடுத்த மாதம் இப்படம் வெளியாகிறதாம்.

மேலும் அவரின் அம்மா உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறாராம்.