ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சென்ற மாதம் 23ம் தேதி துவங்கியது. தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷனுக்காக நாமினேஷன் இன்று நடந்தது.
கவின், சாக்ஷி, சரவணன், பாத்திமா, சேரன், மீரா, மதுமிதா ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
யார் வெளியேறப்போவது யார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியவரும்.
மீராவுக்கு எதிராக 7 பேர், மதுமிதாவுக்கு எதிராக 6 பேர் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.