தமிழ் பிக் பாஸின் 3வது சீசன் தொடங்கி, சண்டை, சென்டிமென்ட் என்று பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இதில் 15 போட்டியாளர்கள் தொடக்கத்தில் வீட்டிற்குள் நுழைந்தனர்.
பின்னர் 2 வது நாள் மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார்.
இவர் நுழைந்த ஒரு மணி நேரத்திலிருந்தே வீட்டில் பிரச்சினைகல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தினமும் சண்டைதான் நடந்து வருகிறது.
இதில் மீரா மிதுன், தினமும் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற இவர், பல்வேறு மோசமான செயல்களில் ஈடுபட்டு பலரை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் அவரது பட்டம் திரும்ப பெறப்பட்டது. பின்னர் “மிஸ் தமிழ்நாடு திவா” என்ற பெயரில் அழகி போட்டி நடத்த முயன்றபோது, பல்வேறு பிரச்னைகளால் நடத்த முடியாமல் போனது. இதற்கு ஜோ மைக்கேல் என்பவர் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறியிருந்தார்.
இதையடுத்து சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த ஜோ மைக்கேல், மீரா மிதுனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வைப்பேன் என்று அதிரடியாக கூறினார்.
இந்நிலையில் ஜோ மைக்கேல் மீது மீரா மிதுனின் தாயார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அடுத்து என்ன ஆகுமோ என்ற பதற்றத்தில் உள்ளனர்.