பல நாடுகளுக்கு செல்லும் பள்ளிப்படிப்பை தாண்டாத தமிழ்ப்பெண்..

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமாகி குழந்தைகள் பெற்று பின்னர் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கண்ட சாதாரண குடும்பத்தை சேர்ந்த தமிழக பெண் இன்று கோடிக்கணக்கில் வருமான ஈட்டி வருகிறார்.

தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்தவர் சகீலா பரூக். பனிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் மண்பாண்டப் பொருள்களைத் தயாரித்து விற்பதன் மூலம் தற்போது ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறார்.

சகீலா கூறுகையில், பள்ளியில் படிக்கும் போது ரசனையாக ஓவியம் வரைவேன், ஆனால் அதற்காக எதுவும் பயிற்சி எடுக்கவில்லை.

அதனுடன் வீட்டின் அருகில் உள்ளவர்களின் கிழிந்த துணிகளைத் தைத்து கொடுத்து பணம் சம்பாதிப்பேன்.

பனிரெண்டாம் வகுப்பை முடித்ததும் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. பின்பு மண்பாண்டப் பொருள்களைத் தயாரித்து விற்கலாம் என முடிவெடுத்தேன்.

13 வருடத்துக்கு முன்பு விற்பனைக்காக எகிப்து நாட்டுக்கு போன போது என அதிர்ச்சி காத்திருந்தது. நான் அங்கு 1,000 டொலர்களை தான் கொண்டு போனேன். அப்போது கார் ஓட்டுனர் 100 டொலரை வாங்கி ஏமாற்றிவிட்டார்.

இதோடு நான் எடுத்து கொண்டு போன மண்பாண்டப் பொருள்களும் பெரிதாக விற்பனையாகவில்லை.

பின்னர் தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்ள தொடங்கினேன்.

உள்ளூரிலேயே விற்பனை வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம் என முடிவு செய்து கடுமையாக உழைக்க தொடங்கினேன்.

தொழிலை நடத்தி கொண்டே என் பொண்ணுங்க இருவரையும் நன்றாக படிக்க வைத்தேன்.

தொழில் பயணமா துபாய், எகிப்து, சீனா, சவுதி அரேபியா உட்பட பல நாடுகளுக்குப் நான் சென்றுளேன் என கூறியுள்ளார்.

சகீலா விரைவில் அமெரிக்காவிலும் தனது விற்பனையகத்தை தொடங்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.