அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை நம்மன்குணம் கிராமத்தில் உள்ள காலனி பகுதியை சார்ந்தவர் சுடர்மணி. இவர் சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சங்கீதா. இவர்கள் இருவருக்கும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
இந்த நிலையில்., சுடர்மணியுடன் அதே கிராமத்தை சார்ந்த சரவணன் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரே தெருவை சார்ந்தவர்கள் என்பதால் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில்., சுடர்மணியின் இல்லத்திற்கு சரவணன் அடிக்கடி வந்து செல்லும் வழக்கத்தை வைத்துள்ளார். இந்த சமயத்தில்., சங்கீதாவிற்கும் – சரவணனிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த சமயத்தை உபயோகம் செய்ய நினைத்த சரவணன்., சுடர்மணிக்கு அடிக்கடி மது வாங்கி தந்து., சுடர்மணி மதுவை குடிக்க வைத்து போதையில் மயங்கியதும்., சங்கீதாவுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில்., இதனை புகைப்படமாகவும் பதிவு செய்துள்ளார். இந்த முறையற்ற உறவானது சுடர்மணிக்கு தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த சுடர்மணி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதை அடுத்து., சங்கீதா கணவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நேரத்தில்., சரவணன் சங்கீதாவை மீண்டும் உல்லாசத்திற்கு அழைப்பது விடுத்து., உல்லாசத்திற்கு ஒத்துழைக்காவிடில் ஆபாச புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இந்த நேரத்தில்., கடந்த 19 ஆம் தேதியன்று சங்கீதாவின் உறவினரான அறிவழகன் என்பவருக்கு வாட்சப் மூலமாக அனுப்பி வைத்த நிலையில்., இதனை கண்ட அறிவழகன் சங்கீதாவிடம் கேட்க., மனமுடைந்த நிலையில் சங்கீதா தற்கொலைக்கு முயற்சிக்கவே., இவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த செய்தியை அறிந்த சங்கீதாவின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் தனது மகளின் இறப்பிற்கு காரணமாக இருந்த சரவணனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.