இந்திய அணியை மோசமாக விமர்சித்த நடிகர் சித்தார்த்!

இந்திய அணியில் நடக்கும் மாற்றங்கள் குறித்து நடிகர் சித்தார்த் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

உலகக்கோப்பையில் விளையாடி வரும் இந்திய அணி நிறைய சிக்கல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறது. டோனி சரியாக ஆடவில்லை, தவான், புவனேஷ்வர்குமார் ஆகியோர் காயத்தால் வெளியேறியது ஆகியவை அணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று ஆல்-ரவுண்டர் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த விஜய்ஷங்கர் காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக 4வது இடத்தில் அம்பத்தி ராயுடு சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மயங்க் அகர்வாலை இந்திய அணி நிர்வாகம் தெரிவு செய்தது.

இதனால் அம்பத்தி ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைக்காது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ராயுடுவுக்கு ஆதரவாகவும், இந்திய அணியை விமர்சித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் அதில் கூறுகையில், ‘அன்புள்ள ராயுடு, நீங்கள் இதை விட சிறப்பான நல்ல விடயத்திற்கு தகுதியானவர். மன்னித்துவிடுங்கள். இது என்ன மோசம். நீங்கள் வலிமையாக இருக்க வேண்டும். உங்கள் திறமைக்கும், அர்பணிப்பிற்கும் கிடைக்க வேண்டியது இது அல்ல’ என தெரிவித்துள்ளார்.