கடனை திருப்பி கொடுக்காததால் பெண்ணை கடத்தி கொலை செய்த கணவன் – மனைவி.!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தனியார் தங்கும் விடுதியில் பெண்ணொருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்ட விடுதி ஊழியர்கள் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் கடந்த சனிக்கிழமையன்று பெண்ணொருவரை கைது செய்து நிலையில்., அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில்., காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பனையூரை சார்ந்தவர் அருளானந்தம். இவர் கடந்த ஜூன் மாதத்தின் 25 ஆம் தேதியன்று வேளாங்கண்ணியில் இருக்கும் விடுதியில் இரண்டு பெண்களுடன் அறையெடுத்து தங்கியுள்ளார்.

பின்னர் இரண்டு நாட்கள் கழித்தும் அறை திறக்கப்படாமல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த விடுதி கண்காணிப்பாளர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அந்த சமயத்தில்., சுமார் 40 வயதுடைய பெண் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து விடுதியில் இறந்து கிடந்தவர் தஞ்சாவூர் பர்மா காலனி பகுதியை சார்ந்த கவிதா என்பதும்., இவரை கொலை செய்த நபர்கள் அருளானந்தம் மற்றும் அவரது மனைவி சுமதி என்பதும் தெரியவந்தது. மேலும்., வாங்கிய கடனை வழங்காததால் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.