லண்டன் வான்வெளியில் விமானத்தில் இருந்து கீழே விழுந்த நபர்..

பிரித்தானியா தலைநகர் லண்டனில், நபர் ஒருவர் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யா நாட்டின் நைரோபி நகரத்திலிருந்து, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணித்த கென்யா ஏர்வேஸ் நிறுவனத்திற்கு செந்தமான விமானத்திலிருந்து நபர் ஒருவர் கீழே விழுந்துள்ளார்.

தெற்கு லண்டன், கிளாபம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் குறித்த நபர் விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டின் தோட்டத்தில் ஒருவர் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்ட அதிர்ச்சியடைந்த உரிமையாளர், பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ஒரு பை, தண்ணீர் மற்றும் உணவைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர், அந்த நபர் அங்கேயே ஒளிந்துகொண்டு நடுவானில் விமானத்திலிருந்து விழுந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

விமானத்தில் திருட்த்தனமாக பயணித்து உயிரிழந்த நபரை அடையாளம் காண உதவுமாறு கென்யா உயர் அதிகாரிகளுடன், லண்டன் காவல்துறையினர் ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திடீர் மரணம் என்று கருதப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.