பிரித்தானியா சென்ற கணவன்.. அவர் உண்மை முகத்தை கண்டு அதிர்ந்த மனைவி..

இந்தியாவில் திருமணமான சில நாட்களிலேயே மனைவியை தவிக்க விட்டு பிரித்தானியாவுக்கு சென்ற கணவன், மனைவியுடன் வாழ பிடிக்கவில்லை என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் தீபக். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

ராஜேஷ் பிரித்தானியாவில் பணிபுரிந்த நிலையில் திருமணத்துக்காக இந்தியாவுக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் திருமணமான சில நாட்களில் மனைவியை தனது பெற்றோர் வீட்டில் விட்டு பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார் ராஜேஷ்.

பின்னர் மனைவியிடம், எனக்கு உன்னை பிடிக்கவில்லை, நாம் இருவரும் பிரிந்துவிடலாம் என கூறியதோடு மிக மோசமான வார்த்தைகளால் மனைவியை திட்டி மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக புதுப்பெண் தனது குடும்பத்தாருடன் சேந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து ராஜேஷ், அவர் பெற்றோர் உட்பட 9 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதில் ராஜேஷ் உள்ளிட்ட 4 பேர் பிரித்தானியாவில் தற்போது உள்ள நிலையில் மீதி ஐவர் இந்தியாவில் உள்ளனர்.

இதனிடையில் தற்போது வரை இவ்விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.