தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டியை சேர்ந்தவர் உமா. இவர் தனது கணவர் பசுவராஜுடன் வசித்து வந்த நிலையில் கருத்துவேறுபாட்டால் கணவரை சில காலத்துக்கு முன்னர் பிரிந்தார்.
இதையடுத்து தனது மகன்களான உமாசங்கர் மற்றும் அபிஷேக்குடன் வசித்து வந்தார். உமாசங்கருக்கு கோவையில் வேலை கிடைத்ததால் அங்கு சென்றுவிட்டார்.
இளைய மகன் அபிஷேக் தனியார் காட்டேஜ் ஒன்றில் பார்ட் டைம் வேலை இரவு நேரங்களில் பார்க்கிறார்.
இந்நிலையில் இரவுவேலை முடிந்து வழக்கம் போல இன்று காலை அபிஷேக் வீட்டுக்கு வந்தார்.
வீட்டின் கதவு எப்போதும் மூடியே இருக்கும் என்ற நிலையில் இன்று கதவு திறந்திருந்ததால், உள்ளே சென்று பார்த்தார் அபிஷேக்.
அப்போது உமா கழுத்து அறுபட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறினார்.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து உமாவின் சடலத்தை கைப்பற்றினார்கள். முதற்கட்ட விசாரணையில் பணம், நகைக்காக உமா கொலை செய்யப்படவில்லை என தெரியவந்தது.
பொலிசார் கூறுகையில், வீட்டினுள் பொருட்கள் ஏதும் கொள்ளை போகவில்லை. இந்நிலையில், வீட்டில் உமா தனியாக இருப்பதை அறிந்து கொலையாளி வந்திருக்கக்கூடும்.
அவர் உமாவுக்குத் தெரிந்தவராக இருக்கலாம். அதனால்தான் உமா கதவைத் திறந்திருக்கலாம்.
சமையல் அறையில் உமாவின் கழுத்தை அறுத்து, பின்னர் படுக்கையறையில் படுக்க வைத்துள்ளனர். சமையல் அறை மற்றும் படுக்கை அறையில் ரத்தக் கறை உள்ளது. கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறோம் என கூறியுள்ளனர்.