உயர்தர மாணவர்கள் இரு பெண்களுடன் மோசமான செயல்….

மின்னேரிய ஏரிக்கு அருகில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட மாணவர்கள், பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவீனரக வாகனம் ஒன்றுக்குள் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில், 3 மாணவர்கள் இரண்டு பெண்கள் உட்பட ஏனையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட நவீன மோட்டார் வாகனத்தில் மின்னேரிய ஏரிக்கு அருகிலுள்ள வீட்டினுள் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொலநறுவையிலுள்ள பிரபல பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.

பேருவளை, பாணந்துறையை சேர்ந்த பெண்களும், ஏனையவர்கள் புத்தளத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களுடன் ஹெரோயின் போதைப்பொருள் 2 கிராம் 120 மில்லிகிராம், ஐஸ் போதைப்பொருள் 150 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.

புத்தளத்தில் இருந்து சென்ற இந்த குழுவினர் எலியோன் ரக சொகுசு வானத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டு பெண்கள் இருவர் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு நீண்ட காலகாலமாக இடம்பெற்று வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.