அண்ணன் மகளை மிரட்டி பலாத்காரம் செய்த சித்தப்பா.!

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே வழங்கப்படுகிறது என்று செய்தியானது நம்மிடையே பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது.

இந்தியாவின் யூனியன் பிரேதேசமாக இருந்து வரும் கோவாவில் துணிக்கடை வைத்து நடத்தி வரும் நபரின் பெயர் அப்துல் ரசாக். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 17 வயதுடைய மகள் உள்ளார். இவரின் வியாபாரத்திற்கு உதவியாக ஒரு ஆள் தேவைப்பட்ட நிலையில்., உதவியாக இவரது சொந்த தம்பியான முகமது ரபீக்கை நியமனம் செய்துள்ளார்.

இவனுக்கு வயது 31 ஆக ஆகும் நிலையில்., இன்னும் இவனுக்கு திருமணம் முடியவில்லை. இவன் தனது அண்ணனின் இல்லத்திலேயே தங்கியிருந்த நிலையில்., அண்ணனின் மகளுடன் பழகியுள்ளான். சித்தப்பா முறை என்பதால் வீட்டில் யாரும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில்., வீட்டில் யாரும் இல்லத்தில் சமயத்தில் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த கொடூரன்., இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக கூறியுள்ளான்.

இதனை கேட்டு பயந்துபோன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்து வந்த நிலையில்., இதனை உபயோகம் செய்த காம கொடூரன் வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில் சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளான். இந்த நிலையில்., சிறுமியின் நடவடிக்கையில் இருக்கும் மாற்றத்தை அறிந்த பெற்றோர்கள்., அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்துள்ளனர்.

சிறுமி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிந்த கொடூரன் வீட்டிற்கு வருவதை நிறுத்தி கொண்ட நிலையில்., சிறுமியை சோதனை செய்த மருத்வவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து சிறுமியிடம் விசாரிக்கவே., சிறுமி நடந்ததை கூறி கதறியழுத்துள்ளார்.

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளிக்கவே., இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு காம கொடூரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அங்குள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.