சாவும் நிலைக்கு என்னை தள்ளிய கணவர்.. பெண் வழக்கில் திருப்பம்

இந்தியாவில் கணவரின் கொடுமை தாங்காமல் மாடியில் இருந்து கீழே குதித்து மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் அனிஷா. விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும் மாயங் சிங்கிவி என்பவருக்கு கடந்த 2016 பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த தேனிலவு சென்ற போதே அனிஷாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவரிடம் வரதட்சணை கேட்டு மாயங் கொடுமைப்படுத்த தொடங்கினார். பின்னர் தினமும் மனைவியை கொடுத்திப்படுத்தி வந்தார் மாயங்.

இந்நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி தனது தோழிக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய அனிஷா, என்னை மாயங் ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார், என்னை வந்து காப்பாற்று என தெரிவித்தார்.

பின்னர் மீண்டும் அனுப்பிய மெசேஜில் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன், என்னை அந்த நிலைக்கு என் கணவர் தான் தள்ளிவிட்டார் என தெரிவித்ததோடு, அறை கதவை கணவர் திறந்துவிட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து தனது தாய் வீட்டுக்கு சென்று அனிஷா அங்குள்ள மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அப்போது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின்னர் பொலிசார் மாயங்கை கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமீன் கிடைக்கலாம் என முதலில் கூறப்பட்டது

ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கமுடியாது என கூறி நீதிமன்றம் மனுவை நேற்று அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.