கேரள மாநிலத்தில் உள்ள நெடுமங்காடு தெக்கும்கரை பகுதியை சார்ந்தவர் மஞ்சுளா. இவருக்கு 16 வயதுடைய மகள் உள்ளார்., இவர் அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்தார். மஞ்சுளாவின் கணவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இறந்துவிட்ட நிலையில்., மஞ்சுளா தனது மகளுடன் அங்குள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த சமயத்தில்., சிறுமி தனது பாட்டியின் இல்லத்தில் தங்கி பள்ளிக்கு சென்று வரும் வழக்கத்தை வைத்துள்ளார். இந்த நிலையில்., மஞ்சுளாவிற்கும் அதே பகுதியை சார்ந்த அனீஸ் அகமத் என்ற இளைஞனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளகாதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
மேலும்., மஞ்சுளாவின் மகள் பள்ளிக்கு சென்ற சமயத்தில் இருவரும் மகிழ்ச்சியுடன் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பள்ளிக்கு சென்ற சிறுமி உடல் நிலை சரியல்லாததால் வீட்டிற்கு பள்ளி நேரம் முடியும் முன்பே திரும்பியுள்ளார். இந்த சமயத்தில் தனது தாயார் கள்ளகாதலனோடு உல்லாசம் அனுபவித்த காட்சியை கண்டு சிறுமி அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் கேட்கவே., இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும்., பருவ வயதில் என்னை வைத்துக்கொண்டு கள்ளக்காதல் உறவில் ஈடுபடலாமா? என்று வாக்குவாதம் அதிகரித்து சண்டையிட்டுள்ளனர். தனது மகளின் பேச்சையும் கேட்காத மஞ்சுளா கள்ளகாதல் உறவில் அதிக நாட்டம் கொள்ளவே., கள்ளக்காதல் உறவிற்கு இடையூறாக மகள் இருப்பதாக எண்ணி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இவர்களின் திட்டப்படி கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வீட்டில் இருந்த சிறுமியை கள்ளக்காதலன் பின்புறமாக இறுக்கி பிடிக்கவே., தாயார் தனது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனால் துடிதுடித்து உயிரிழந்த சிறுமியின் உடலை அங்குள்ள பாழங்கிணற்றில் வீசிய நிலையில்., தனது மகளை காணவில்லை என்று கபட நாடகம் ஆடி அனைவரையும் ஏமாற்றியுள்ளார்.
இதுமட்டுமல்லாது இதனை நம்பிய மஞ்சுளாவின் தாயார் தனது மகளை தேடி செல்வதாக கூறி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் மகள் மற்றும் பேத்தி குறித்த எந்த விதமான தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளாவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., இவர்களின் அலைபேசி எண்ணை அறிந்த காவல் துறையினர் சோதனை செய்த சமயத்தில் நாகர்கோவில் பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியாக மகளை கொலை செய்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் கள்ளகாதலுடன் உல்லாசம் அனுபவித்து வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில்., முதலில் முன்னுக்கு பின்னர் முரணாக பதிலளித்த கள்ளக்காதல் ஜோடி பின்னர் மகளை கொலை செய்து கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டுள்ளது. இதனையடுத்து சிறுமியின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர்., இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.