ரஷ்யாவில் கணவனால் கை வெட்டப்பட்ட மனைவி தற்போது மகிழ்ச்சியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் Margarita Grachyova. 26 வயதான இவரை அவரின் கணவர் கடந்த 2017-ஆம் ஆண்டு சந்தேகப்பட்டு கோடாரியால் அவரை தாக்கியதால், அவரின் இரண்டு கைகளும் சிதைந்து போய்விட்டன.
இதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் இடது கையை மட்டுமே மருத்துவர்களால் ஒன்று சேர்க்க முடிந்ததே தவிர வலது கைகளை அறுவை சிகிச்சை மூலம் சேர்க்க முடியவில்லை.
இதையடுத்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சியின் காரணமாக அவருக்கு ரோபோட்டிக் கை பொருத்தப்பட்டது.
மனைவியை இப்படி கொடூரமாக தாக்கிய அவரின் கணவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் Margarita Grachyova தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் முதலில் என்னுடைய கைகளை பார்த்த போது பயந்தேன், ஆனால் இப்போது அது பழகிவிட்டது.
அனைத்திலிருந்தும் மீண்டு வருவது தான் மனிதர் என்று கூறியுள்ளார்.