பிக்பாஸ் வீட்டில் பார்வையாளர்கள் அனைவருக்கும் வில்லியாக தெரிபவர் பிரபல நடிகையான வனிதா விஜயகுமார் தான்.
இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண்ணீருடன் அவரின் வாழ்க்கை குறித்து சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.
என்னதான் சோகமான தகவல்களை கூறியிருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.
அதிலும் கடந்த சில நாட்களாக மதுமிதாவை குறிவைத்து தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் மதுமிதாவின் கணவர் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இத்தனை கலாச்சாரம், தாலி சென்டிமென்ட் என்று பேசும் வனிதாவின் கதையை கேட்டால் உங்களுக்கு தலையே சுற்றி விடும்.
பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் நட்சத்திர வனிதா. இவர் முதலில் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆகாஷ் வேறு யாருமில்லை சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கை கணவராக நடித்திருப்பாரா அவர் தான். நடிகர் ஆகாஷ் தமிழில் சொக்கத்தங்கம், தாமிரபரணி,தில் என்று ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள்.
நன்றாக சென்ற இவர்களது மகளும் வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.
அதன் பின்னர் தனது மகளை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.
அதே போல வனிதாவின் பெற்றோர்களும் ஆகாஷ் பக்கமே நின்றனர். ஆனால், நீதிமன்றத்திலோ மனிதன் தான் வளரவேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டார்கள்.
இருப்பினும் ஆகாஷ் மற்றும் விஜயகுமாருக்கு வனிதாவிடம் மகன் வளர்வதை விரும்பவில்லை. இதனால் வனிதாவிற்கும் அவரது பெற்றோர்களுக்கும் கூட மிகப் பெரிய சண்டை வெடித்தது.
அதன் பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராஜன் ஆனந்தன் திருமணம் செய்து கொண்ட பின்னர் இந்த தம்பதியருக்கு ஜெயனிதா என்ற மகளும் பிறந்தார்.
ராஜன் ஆனந்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த அனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.
அதன் பின்னர் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தனது தந்தைக்கு சொந்தமான ஆலப்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார்.
சமீபத்தில் கூட இந்த வீட்டை காலி செய்ய மறுக்கிறார் என்று போலீசில் புகார் கொடுத்தார் விஜயகுமார். ஆனால், வீட்டை காலி செய்ய சொல்ல சென்ற போலீசையே வனிதா மிரட்டி அனுப்பி விட்டார்.
இந்த நிலையில் பிரபல சினிமா நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்தார் வனிதா. மேலும் ராபர்ட் நடித்த எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற எம்ஜிஆர் தயாரித்து இருந்தார் வனிதா.
அதன் பின்னர் நடந்த 2018 ஆம் ஆண்டு ராபர்ட்டிற்கும் தனக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாகவும். ஆனால், அவருக்கு விவாகரத்து கிடைக்காததால் எங்கள் திருமணம் நடக்கவில்லை என்றும் வனிதா கூறியிருந்தார்.
ஆனால், இதனை முழுவதுமாக மறுத்த ராபர்ட், வனிதா ஏன் இவ்வாறு பொய் கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும் எனக்கு அவர் தொழில் ரீதியாக மட்டுமே தெரியும் என்றும், நான் 2007 ஆம் ஆண்டு கிருஷ்ண பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் கூறி இருந்தார்.
இப்படி பெற்றோர்கள் கட்டிய கணவர்கள் பழகிய நண்பர்கள் என்று அனைவருமே வனிதாவை பற்றி மோசமாக தான் பேசி வருகின்றனர்.
ஆனால் மனிதனோ பிக் பாஸ் வீட்டினுள் மற்றவர்களுக்கு நாட்டாமை செய்து வருவதுதான் சற்று வேடிக்கையாக இருக்கிறது