பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக உள்ளே பொலிசார் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போட்டு கொண்டு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் வனிதா.
இந்நிலையில் ஹைதராபாத்துக்கு வந்த வனிதா தனது மகளை கடத்தி வைத்துள்ளார் என அவரின் இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் தெலுங்கானா பொலிசில் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து அவரிடம் விசாரிக்க ஆந்திர பொலிசார் முன்னர் சென்னை வந்த போது வனிதா தலைமறைவானார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் அவர் இருப்பதை அறிந்த தெலங்கானா பொலிசார், தமிழகக் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.
நசரத்பேட்டை காவல்துறை உதவியுடன் தெலுங்கானா காவலர்கள், வனிதா விஜய்குமாரிடம் விசாரணை நடத்த பூந்தமல்லியில் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக் பாஸ் அரங்கத்துக்குள் சென்றுள்ளார்கள்
மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வனிதா கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.