திருமணம் செய்யாமல் மூன்று வயது மகள்.. சர்ச்சையில் நடிகை

திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்வது இந்திய கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்றாலும் சில பிரபலங்கள் அதை செய்து சர்ச்சைகளில் சிக்குகின்றனர்.

2008ல் வெளிவந்த தேவ் டி படத்தின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை மாஹி கில் தன்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி இதுவரை வாய்திறந்து பேசியதே இல்லை.

சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் தன்னுடைய மூன்று வயது மகள் பற்றி பேசிவிட்டார். ஆனால் உங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையே என கேட்டதற்கு, ‘வரும் ஆகஸ்ட்டில் என் மகளுக்கு மூன்று வயது ஆகிறது. ஆம் நான் இன்னும் திருமணம் செய்யவில்லை, எனக்கு தோன்றும்போது நான் நிச்சயம் திருமணம் செய்வேன்” என கூறியுள்ளார் .