தமிழகத்தில் வெயில் ஆறு மாதங்களாக சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தால் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. மேலும் தண்ணீர் பிரச்சினை பொது மக்களின் தீவிர தலைவலியாக மாறியுள்ளது.
இந்தநிலையில், சென்னையில் பரவலாக மழை செய்துள்ளது. குறிப்பாக அண்ணாநகர், திருமங்கலம், மதுரவாயல், பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், போரூர், மாங்காடு, குன்றத்தூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தனித்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று ஆகியவற்றின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில்., தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்யும் என்றும்., திண்டுக்கல்., திருப்பூர்., நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும்., சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று அறிவித்துள்ளது.