கனடாவிலிருந்து மகனுடன் அவுஸ்திரேலிய விமான நிலையம் வந்த ஒரு பெண்ணின் சூட்கேசை சோதித்த பொலிசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
தனது மகனுடன் சிட்னி விமான நிலையத்தில் வந்திறங்கின L. Roberts (42) என்னும் அந்த பெண் மூன்று மிகப்பெரிய சூட்கேஸ்களுடன் வந்தபோது, அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரது சூட்கேஸ்களை எக்ஸ் ரே இயந்திரத்தின் வழியாக அனுப்பினர்.
எக்ஸ் ரே இயந்திரம் அந்த சூட்கேஸ்களில் ஏதோ அசாதாரணமாக இருப்பதைக் காட்டியது. சூட்கேஸ்களை பரிசோதித்த அதிகாரிகள், அந்த சூட்கேஸ்களின் உள்பகுதியில் தைக்கப்பட்டிருந்த துணியின் அடியில் ஏதோ வெள்ளை நிறப் பொடி மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.
அது என்ன என்று சோதித்தபோது, அது கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் என தெரியவந்தது.
மூன்று சூட்கேஸ்களிலுமாக சுமார் 12 கிலோ போதைப்பொருள் இருந்தது. உடனடியாக அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.