இன்றுள்ள திரை நட்சத்திரங்கள் பலரும் ஹாலிவுட் திரையுலகில் நடிக்க செல்வது கடந்த சில காலங்களாக அதிகரித்து கொண்டு வருகிறது. இந்தி திரையுலகின் முன்னணி மற்றும் பிரபலமான நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கு பின்னர் அமெரிக்காவின் பிரபல பாடகரான நிக் ஜோனாசை காதலித்து வந்த நிலையில்., இருவரும் திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியேறினர். இதுமட்டுமல்லாது இவர்களுக்கு முன்னாள் ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோன் போன்றோர் ஹாலிவுட் திரையுலகில் நடித்துள்ளனர்.
முன்னணி நட்சத்திரமாக இருந்து வந்த தனுஷ் “தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆப் பகிர்” என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னர் இந்த திரைப்படத்தை தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியிட்டனர். இந்த சமயத்தில்., நடிகர் நெப்போலியனுக்கு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து நடிகை ராதிகா ஆப்தே மற்றும் சுருதி ஹாசன் ஆங்கில தொடர்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களின் வரிசையில் தற்போது காஜல் அகர்வாலும் இருப்பதாகவும்., இந்த படத்திற்கான படிப்பிடிப்பு மற்றும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.