தமிழகத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை கர்ப்பமாக்கிய 55 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திண்டிவனம் அடுத்துள்ள கிராமம் கிராண்டிபுரம். இங்கு விருத்தாம்பாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் சுகன்யா, சுமதி என்ற 2 பெண்கள் உடல் ஊனமுற்றவர்கள். அதிலும் சுமதி (14) மன வளர்ச்சி குன்றியவரும் கூட.
சுமதி அடிக்கடி கிராமத்தில் ஆடு மேய்த்த நிலையில் ஒருநாள் மலையடிவாரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தாள்.
அப்போது அதே ஊரை சேர்ந்த கன்னியப்பன் (55) என்பவரும் ஆடு மேய்க்க அங்கு வந்தார்.
பின்னர் அவர் சுமதியை துஷ்பிரயோகம் செய்தார். ஆனால் இதை வெளியில் சொல்லக்கூட சுமதிக்கு தெரியவில்லை.
இந்நிலையில், சென்னையில் வசித்து வரும், விருத்தம்பாளின் மூத்த மகளான மாலதி, சுமதி 8 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் விடயத்தை கண்டுபிடித்து அதிர்ந்தார்.
இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி கன்னியப்பனை கைது செய்துள்ளனர்.