விமானத்தில் வெளிநாட்டு சிறுமிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி…

சவுதியிலிருந்து இலங்கை செல்லவிருந்த தன்னுடை மகளுக்கு விமானத்தில் தந்தை கொடுத்த இன்ப அதிர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, சவுதி அரேபியாவிலிருந்து, இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு வந்துள்ளது.

அப்போது இதே விமானத்தில் Ms. Hajer என்ற சிறுமி பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது விமானத்தின் உள்ளே வந்த சிறுமிக்கு, அங்கிருந்த விமான பணியாளர்கள் கேக், பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை வைத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

தன்னுடைய மகளின் பிறந்தநாள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரின் தந்தை இதை விமானநிறுவனத்திடம் கூறியதாகவும், அதன் பின்னர் இதை விமான பணியாளர்கள் செய்ததாக கூறப்படுகிறது.