இந்தியாவில் ரயிலில் ஏசி வகுப்பில் தம்பதி பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென மனைவி மாயமானது கணவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜூ ராய். இவர் மனைவி நீலிமா. தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் இவர்கள் மூவர் மற்றும் ராயின் மைத்துனர், நேற்று ரயிலில் ஏசி வகுப்பில் பயணம் செய்தனர்.
அப்போது ரயிலில் உள்ள கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு நீலிமா சென்ற நிலையில் வெகுநேரமாக இருக்கைக்கு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ராய் கழிப்பறைக்கு சென்று பார்த்த போது அங்கு நீலிமா இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து ரயிலில் இருந்து இறங்கி காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.
புகார் மனுவில், என் மனைவி அணிந்திருந்த நகைகளை திருடும் நோக்கில் அவரை கொள்ளையர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையில் ரயில் இருக்கையில் நீலிமாவின் ஹேண்ட் பேக் இருந்ததோடு அதில் அவர் செல்போன் இருந்தது.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.