பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகை மீரா மிதுனுக்கு பொலிஸார் சம்மன்…

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகை மீரா மிதுனை பணம் கொடுக்கல் வாங்கல் வழக்கில் விசாரணை செய்ய பொலிஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் நடிகை மீரா மிதுன் பங்கேற்றுள்ளார்.

சென்னையை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் ரூ.50ஆயிரம் கொடுக்கல் வாங்கல் வழக்கில் மீரா மிதுன் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் தேனாம்பேட்டை பொலிஸார் நடிகை மீரா மிதுன் ஜூலை 19 ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் நிகழ்ச்சி முடிந்த பின் ஆஜராவதாக மீரா மிதுன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மகளை கடத்தி வந்ததாக பிக்பாஸ் வீட்டில் நடிகை வனிதா மீது வழக்கு பதியப்பட்டு மேற்கொள்ளப்பட்டு விசாரணையில், தாயுடன் இருப்பதாக மகள் கூறியிருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.