இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி மாணவியை சீரழித்து வீடியோ வெளியிட்ட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் 19 வயது கல்லூரி மாணவியை காரில், 5 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாட்ஸ்-அப்பில் இந்த வீடியோ பரவியுள்ளது. இதனை கண்காணித்த பொலிசார் மாணவியை தொடர்பு கொண்ட பொலிசார் அவரிடம் பேசியுள்ளது.
இதில் இச்சம்பவம் ஏப்ரல் தொடக்கத்தில் நடந்தது தெரியவந்துள்ளது. வீடியோ வெளியானதும் தாமாகவே முன்வந்து விசாரிக்க தொடங்கிய பொலிசார்,
குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். மட்டுமின்றி மாணவர்களை அடையாளம் காணும் பணியையும் தொடங்கினர்.
இறுதியில் 19 வயதுடைய பிரக்யாத், குருநந்தன், சுனில், பராஜ்வால், கிஷான் என 5 கல்லூரி மாணவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைதான மாணவர்கள் அனைவரும் புத்தூரை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவியும், மாணவர்களும் ஒரே கல்லூரியில் படித்துள்ளனர். அவர்கள் ஒரே பிரிவில் படிக்கவில்லை என்றாலும், நண்பர்கள் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி பேசுகையில், வீடியோவை வெளியே விடுவோம் என மிரட்டினர். யாரிடமும் தெரிவிக்க கூடாது என மிரட்டினர்.
பயம் காரணமாக யாரிடமும் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களிடம் கும்பல் ஒன்று பணம் பறித்துள்ளனர்.
இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, சித்தரவதை செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர்.
இது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையை சிபிஐ மேற்கொள்கிறது. இந்நிலையிலேயே இதுபோன்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.