ஆதி காலத்தில் இருந்து மருத்துவ துறையில் முல்லீன் என்ற இந்த தாவரம் பயன்பட்டு வருகிறது.
இதன் இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் அனைத்துமே பல வகையான நோய்களை போக்குகின்றன.
குறிப்பாக சுவாச பாதையில் ஏற்படும் பிரச்சினைகளை இது தீர்க்க வல்லது.
இதன் இலைகளில் எக்ஸ்பெக்டோரண்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பொருட்கள் உள்ளன.
மேலும் இதில் டீ போட்டு குடிப்பதனால் ஆஸ்துமா, தொண்டை புண் மற்றும் வறட்டு இருமல் போன்றவற்றை போக்குகிறது.
அந்த வகையில் முல்லீன் டீயை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- உலர்ந்த முல்லீன் பூக்கள் மற்றும் இலைகள் – 1-2 டீ ஸ்பூன்
- கொதித்த நீர் – 1 கப்
- தேன் – சுவைக்கேற்ப
பயன்படுத்தும் முறை
1 கப் தண்ணீரில் உலர்ந்த முல்லீன் இலைகள் மற்றும் பூக்களை சேருங்கள். 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும்
பிறகு வடிகட்டி யை கொண்டு வடிகட்டி நீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு தேன் சேர்த்து பருகுங்கள்.
வேறு நன்மைகள்
- இந்த இலையின் சாறு அல்லது களிம்பு போன்றவை காதில் ஏற்படும் தொற்றுக்களை போக்குகிறது.
- நமது உடலில் தேங்கியுள்ள கெமிக்கல் நச்சுக்கள் மற்றும் நச்சுக்களை அலசி வெளியேற்றுகிறது.
- சுவாச பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறது. நெஞ்சில் ஏற்படும் சளி போன்றவற்றிற்கு இதை பயன்படுத்தி வந்தால் சீக்கிரம் இதை சரி செய்து விடலாம்.
- இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை தலைவலி மற்றும் கெளட் அழற்சியை போக்குகிறது.
- முல்லீன் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இரத்த குழாய்களில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது.
- இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை வயிற்று பிரச்சினைகளை சரி செய்கிறது. வயிறு மந்தம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவற்றை போக்குகிறது.
- காயங்களை ஆற்ற (இதன் ஆன்டி செப்டிக், ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை உதவுகிறது.