வவுனியா பள்ளிவாசலை சுற்றியுள்ள கடைகளில் அத்து மீறலாக அமைக்கப்பட்டுள்ள மேலதிக பொருத்துக்களை வவுனியா நகரசபை முதன் முதலாக நேற்றைய தினம் அகற்றியுள்ளது.
இதன் போது இதனை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மற்றும் நகரசபையினருக்கு எதிர்ப்புவெளியிடும் வகையில் அங்கு நின்ற நபரொருவர் அநாகரீகமாக தாம் அணிந்திருந்த சாரத்தை தூக்கி காட்டி ஆபாசமாக செயற்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நேற்று பகல் வவுனியா நகரசபையினர் நகரில் அமைந்துள்ள கடை தொகுதிகளில் நகரசபை சட்டத்திற்கு விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மேலதிக கொட்டகைக்கள் மற்றும் கடை முன்பாக அமைக்கப்பட்டிருந்த பொருத்துக்களை அகற்றி வந்தனர்.
இதன்போது ஹொரவப்பொத்தான வீதியில் பள்ளிக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கடை தொகுதிகளில் நகரசபை சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்டிருந்த மேலதிக பொருத்துக்கள் கொட்டகைகள் என்பனவும் அகற்றப்பட்டன
இந்நடவடிக்கையானது இதுவரை காலத்தில் நகரசபையினரால் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட விடயமாக பொதுமக்களால் கருதப்படுகின்ற்து.
இந் நிலையில் குறித்த கடைத்தொகுதியில் இருந்த நபர் ஒருவர் நகரசபையினருக்கும் , செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அவமதிக்கும் முகமாகவும் தாம் அணிந்திருந்த சாரத்தை தூக்கி காட்டியதுடன் ஆபாச வார்த்தைகளையும் பேசியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபரின் செயல் தொடர்பில் அங்கு நின்ற நகரசபையினரிடமும் நகரபிதாவிடமும் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.