தமிழகத்தில் இளம்பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் தாமாகவே முன்வந்து நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
துாத்துக்குடியை சேர்ந்தவர் நடேஷ் (36). இவரது மனைவி மகாராணி (29). இவர்களது மகன் விம்ரித் (5).
நேற்று முன்தினம் நடேஷ் வேலைக்குச் சென்றுவிட்டார். மகன் பள்ளிக்குச் சென்றிருந்தார். வீட்டில் தனியாக இருந்த மகாராணி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
வீட்டுக்கு வந்த நடேஷ் மனைவி சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் மகாராணியின் கணவர் நடேஷ் வெளிநாட்டு வேலைக்கு சென்றார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் இளவரசனுடன் (23) மகாராணிக்கு கூடாநட்பு ஏற்பட்டது.
இதனை கணவர் கண்டித்துள்ளார். தற்போது நடேஷ் வெளிநாட்டு வேலையை விட்டு துாத்துக்குடியில் பணியில் சேர்ந்து விட்டதால் இளவரசனின் தொடர்புக்கு சிக்கல் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மகாராணியை சந்திக்க அவரது வீட்டிற்கு இளவரசன் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் அவரை கொலை செய்து விட்டு தாமும் தற்கொலை செய்ய கையை பிளேடால் அறுத்துள்ளார். பின் அங்கிருந்து தப்பியதும் தெரிந்தது.
இதையடுத்து பொலிசார் தனிக்குழு அமைத்து இளவரசனை தேடி வந்தனர்.
வழக்கில் திருப்பம் ஏற்படும் வகையில் இளவரசன் தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மகாராணியின் மேலிருந்த ஆத்திரத்தால் அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.