முன்னாள் காதலியின் அழைப்பை நம்பி சென்ற இளைஞர்: சிறுநீரை குடிக்கக் கொடுத்த பெண்!

முன்னாள் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞர் ஒருவரை, அந்த பெண் தனது இந்நாள் காதலன் மற்றும் நண்பர் ஒருவருடன் சேர்ந்து நாய் போல கயிற்றால் கட்டி சிறுநீரைக் குடிக்க வைத்து ஆறு மணி நேரம் கொடுமைப்படுத்திய சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த Kathleen Phelan (18), தனது முன்னாள் காதலர் Matthew Butcherஐ வீட்டுக்கு வரவழைத்து தனது இந்நாள் காதலரான Russell-Brookes(20) மற்றும் நண்பர் Emeryயுடன் சேர்ந்து அவரை ஆறு மணி நேரம் சித்திரவதை செய்துள்ளார்.

Kathleenம் Russellம் Matthewவின் நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து மாறி மாறி கத்தியால் கீறியிருக்கிறார்கள்.

Kathleen, Matthewவின் விரலைப் பிடித்து அவரது மொபைலை இயக்கச் செய்து அவரது வங்கிக் கணக்கிலிருந்து 150 பவுண்டுகளை தனது கணக்கிற்கு மாற்றியிருக்கிறார்.

Emery வந்ததும் அவர் கொண்டு வந்த கயிற்றை Matthewவின் கழுத்தில் கட்டி, அவரை நாய் போல நடந்து கொள்ள வற்புறுத்தியிருக்கிறார்கள்.

அவருக்கு நாய் சாப்பிடும் பாத்திரம் ஒன்றில், சிறுநீர், பீர், உப்பு ஆகியவற்றைக் கலந்து கொடுத்து, குடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். இல்லையென்றால் இன்னொரு 24 மணி நேரத்திற்கு சித்திரவதை செய்வதாக மிரட்ட, அதைக் குடித்திருக்கிறார் Matthew.

குடித்து விட்டு Matthew வாந்தி எடுக்க, அதையும் சாப்பிட வைத்து கொடுமைப் படுத்தியிருக்கிறார் Russell.

ஆறு மணி நேரத்திற்குப்பின் விடுவிக்கப்பட்ட Matthew, நடந்ததை தனது நண்பர் ஒருவருக்கு சொல்ல, பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.

விரைந்து வந்த பொலிசார் Matthewவை தாக்கிய மூவரையும் Kathleen வீட்டில் வைத்தே கைது செய்துள்ளார்கள்.

வழக்கு விசாரணைக்குப்பின் Kathleenக்கு மூன்று ஆண்டுகளும், மற்ற இருவருக்கும் சுமார் ஐந்து ஆண்டுகள் வரையும் சிறைத்தண்டனை விதிக்கப்பட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.