இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி தனது அனுபவத்தை ஏனைய இளம் வீரர்களிற்கு வழங்குவதற்காக இன்னும் ஒரிருவருடங்கள் தொடர்ந்து விளையாடவேண்டும் என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
டோனி இன்னும் ஓரிரு வருடங்கள் விளையாடவேண்டும் என நான் நினைக்கின்றேன் என மலிங்க தெரிவி;த்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களில் ஆட்டத்தை அணிக்காக வெற்றிகரமாக முடித்து வைப்பவராக அவர் காணப்படுகி;ன்றார் என லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த திறனை எதிர்காலத்தில் யாராலும் முறியடிக்க முடியாது என மலிங்க குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது அனுபவத்தையும் ஆட்டத்தினை போக்கை எவ்வாறு கையாள்வதில் தனக்குள்ள திறiனையும் இளம் வீரர்களிற்கு கற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள லசித் மலிங்க டோனியின் அனுபவம்; காரணமாகவே இந்திய அணி மிகத்திறமையானதாக காணப்படுகின்றது அவர்களிற்கு உலக கிண்ணத்தில் எந்த அணியையும் தோற்கடிக்கும் திறன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் சிறந்த வீரர்கள் உள்ளதால் அணித்தலைவர் விராட்கோலி கஸ்டப்படவேண்டிய தேவையில்லை எனவும் மலிங்க தெரிவித்துள்ளார்.
விராட்கொடுத்து வைத்தவர் அவரது அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர் அவர்களிற்கு அணியில் தங்கள் கடமை என்னவென்பது தெரியும் எனவும் லசித்மலிங்க தெரிவித்துள்ளார்.
பும்ராவும் சமியும் மிகவும் துல்லியமாக பந்து வீசுகின்றனர்,சமியின் கையில் பந்து செல்லும்போது அவரிற்கு தான் துல்லியமாக பந்து வீசவேண்டியது ஏன் அவசியம் என்பது தெரிந்துவிடும் பும்ரா இறுதி ஓவர்களில் பந்து வீசுவதில் அனுபவம் வாய்ந்தவர் அவரிற்கு நெருக்கடியான நிலையை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரியும் எனவும் லசித்மலிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியில் உண்மையான இரு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்,அதன் காரணமாகவே அந்த அணி வெற்றிகரமானதாக விளங்குகின்றதுஎன தெரிவித்துள்ள லசித்மலிங்க பும்ரா சிறப்பாக விளையாடுகின்றார் அவர் இந்த உலக கிண்ணத்தில் ஐந்து விக்கெட்களை வீழ்த்துவதற்காக நான் காத்திருக்கின்றேன் அரையிறுதியில் அவர்ஐந்து விக்கெட்களை வீழ்த்தினால் இந்தியா நிச்சயம் வெற்றிபெறும் எனவும் அவர் குறிப்பி;ட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை அணிகுறித்து கருத்து தெரிவித்துள்ள லசித் மலிங்க இரண்டு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டதால் இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதிபெறமுடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.