அமெரிக்காவில் ஐஸ் கிரீம் கண்டெய்னர் ஒன்றை திறந்து நக்கிவிட்டு மீண்டும் பிரிட்ஜுக்குள் வைத்து மூடிச் சென்ற இளம்பெண்ணின் அடையாளம் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
டெக்சாசில் சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்ற இளம்பெண் ஒருவர், அங்கிருந்த பிரிட்ஜ் ஒன்றிலிருந்து ஐஸ் கிரீம் கண்டெய்னர் ஒன்றை எடுத்து, திறந்து, ஐஸ் கிரீமை நக்கிவிட்டு, மீண்டும் பிரிட்ஜுக்குள் வைத்து மூடி விட்டார்.
இதை அவருடன் வந்த ஒரு இளைஞர் வீடியோ எடுக்க, பின்னர் அந்த வீடியோ சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
What kinda psychopathic behavior is this?! pic.twitter.com/T8AIdGpmuS
— Optimus Primal (@BlindDensetsu) June 29, 2019
எதிர்மறையான கருத்துக்களுடன் 11 மில்லியன் முறை பார்க்கப்பட்ட அந்த வீடியோ வைரலாக, அது, சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீமை தயாரித்த நிறுவனத்தின் கவனத்திற்கும் எட்டியது.
அமெரிக்காவில் உணவை சேதப்படுத்துவது கடுமையான குற்றம் என்பதால் பொலிசார் அந்தப் பெண்ணை தேடி வந்தனர்.
இந்நிலையில், அந்த பெண்ணின் அடையாளம் தெரியவந்துள்ளதாக இன்று தெரிவித்த பொலிசார், அதை உறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டதும், அவரை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்படும்.
அப்படி அவர் கைது செய்யப்பட்டால், உணவுப்பொருளை சேதப்படுத்தியதற்காக அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம்.
இதற்கிடையில் அந்தப் பெண்ணுடன் வந்த இளைஞரையும் CCTV கெமரா காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் காணும் முயற்சியிலும் பொலிசார் இறங்கியுள்ளனர்.