கணவருக்கு தெரியாமல் மனைவி வாங்கிய லொட்டரி சீட்டு: எத்தனை கோடி தெரியுமா?

ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் குடும்பத்துடன் குடியிருக்கும் யுவதி ஒருவர் லொட்டரி சீட்டில் 22 கோடி ரூபாய் அள்ளியுள்ளார்.

அபுதாபி பிக் டிக்கெட் என அறியப்படும் லொட்டரியில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த சொப்னா என்பவருக்கு 22.47 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் சோப்னா.

லொட்டரியில் தமக்கு 22 கோடி ரூபாய் பரிசாக கிடைத்த தகவலை அப்போதே அவர் தமது கணவர் பிரேமுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

தமது மனைவி லொட்டரி சீட்டு வாங்கிய தகவல் அப்போதுதான் கணவருக்கே தெரியவந்துள்ளது. சொப்னா பிரேம் தம்பதிகளுக்கு 5 வயதில் நட்சத்திரா என்ற மகள் இருக்கிறார்.

அவரது அதிர்ஷ்டமே தங்களுக்கு இதுவரையான அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணம் என சொப்னா தெரிவித்துள்ளார்.

லொட்டரி பணத்தில் ஒருபகுதியை மக்கள் நல உதவிகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 9 ஆண்டுகளாக அபுதாபியில் குடியிருக்கும் சொப்னா, தற்போதுள்ள வேலையை விட்டுவிடும் எண்ணம் இல்லை எனவும், ஆனால் தமது கணவருடன் இணைந்து எதிர்காலம் தொடர்பில் பின்னர் முடிவு செய்வதாகவும் சொப்னா தெரிவித்துள்ளார்.