யாழில் 23 வயது இளம்பெண் செய்த செயல்!

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச் சாட்டில் இளம் குடும்பப் பெண் ஒருவரை சுன்னாகம் பொலிசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

உடுவில் மல்வம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாக சுன்னாகம் பொலிசாருக்கு இரகசிய தகவல்கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே இடத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணின் கைப்பையில் இருந்து 8 கிராம் கெரோயின் போதைப் பொருளை மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பெண்ணின் கணவர் கடந்த வருடம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.