யாழில் நேற்றுகுடும்ப பெண்ணொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணின் குடும்பத்தினரால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
இன் நிலையில் கள்ளக் காதலியுடன் பிடிபட்டு தாக்குதலுக்கு உள்ளான அரச அதிகாரி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமுர்த்தி உத்தியோகத்தராக பணிபுரியும் ஒருவர், யாழ் புறநகர் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.
இதன்போது, குடும்ப பெண்ணொருவருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த, அந்த பெண்ணின் கணவர் பலமுறை எச்சரித்ததாக தெரிகிறது.
நேற்று, குறிப்பிட்ட பெண்ணின் வீட்டிற்கு சமுர்த்தி உத்தியோகத்தர் சென்றிருக்கிறார். இதன்போது, பெண்ணின் 5 வயது பிள்ளையை அறையொன்றிற்குள் பூட்டி வைத்து விட்டு, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளை பெரிய சத்தமாக அழுதபோதும், அவர்கள் கதவை திறக்கவில்லை.
இதன்போது, பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் உல்லாசம் அனுபவிப்பதை நேரில் கண்டதும், சமுர்த்தி உத்தியோகத்தரை நையப்புடைத்துள்ளார்.
அவரது மைத்துனரும், சமுர்த்தி உத்தியோகத்தரை நையப்புடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சமுர்த்தி உத்தியோகத்தரை தாக்கிய கு்றறச்சாட்டில் பெண்ணின் கணவரையும், மைத்துனரையும் பொலிசார் கைது செய்தனர்.
இன்று அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை பிணையில் விடுவித்தது நீதிமன்றம்.