இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற பிரின்ஸ் நருலாவின் சகோதரர் கடல் அலை இழுத்துச் சென்றதில் உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவத்தினால் பிரின்ஸ் நருலாவின் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.
சல்மான் கான் நடத்தும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரினிஸ் நருலா.
மாடலான அவர் தற்போது டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அவரின் சகோதரர்(cousin) ருபேஷ் நருலா கனடாவில் வசித்து வந்தார். அவர் கடந்த திங்கட்கிழமை டொரண்டோவில் உள்ள கடற்கரை ஒன்றுக்கு சென்று கனடா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
நண்பர்களுடன் சேர்ந்து கனடா தினம் கொண்டாடச் சென்ற இடத்தில் ருபேஷை கடல் அலை இழுத்துச் சென்றதில் அவர் உயிர் இழந்தார். ருபேஷுக்கு நீச்சல் தெரியாது. அவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணமானது. இந்தியாவில் இருக்கும் அவரின் மனைவி இந்த மாதம் தான் கனடாவில் செட்டிலாக செல்லவிருந்தார். இந்நிலையில் ருபேஷ் உயிரிழந்துவிட்டார்.
ருபேஷின் மரண செய்தி அறிந்த பிரின்ஸ் தனது மனைவியும், நடிகையுமான யுவிகா சவுத்ரியுடன் கனடாவுக்கு சென்றார். இந்த தகவல் அறிந்த பிரபலங்கள் பிரின்ஸ் நருலாவுக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது பிரின்ஸ் நருலாவுக்கு சக போட்டியாளரான யுவிகா சவுத்ரி மீது காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இதய வடிவில் பரோட்டா சுட்டு யுவிகாவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். யுவிகா பிரின்ஸுக்கு பதில் அளிக்கும் முன்பு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பிரின்ஸ் யுவிகாவை சந்தித்து காதலை வளர்த்தார். இரண்டு ஆண்டுகள் காதலித்த பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.